நல்லாத்தான் இருக்கினம்(றம்)

நேற்றுத்தான் எங்கடை குட்டிக்கு பிறந்த நாள்
அதுக்கு யாழ்ப்பணத்திலைனிருந்து வந்த
எங்கடை அண்ணாவும் வந்தாரவர் முத்தான சிரிப்போடை
முத்தான சிரிப்பெண்டால் அழகு இவரிடம் அடிமை(முருகு் இவரிடம் அடிமை)

என்ன அண்ணை கொஞ்சம் வத்திப்போனீங்க எண்டால்
அது மனுசியின்ரை ஓடராம்(order)
வளைகுடாவுக்கு போனதாலை எங்கடை வளவை சுத்தி மதில் கட்டியாச்சு
ஆனால் உங்கடை உடம்பு கொஞ்சம் ஏத்திப்போட்டுது எண்டு
மனுசி கற்பூரச்சட்டி எடுத்ததாலை நான் இப்ப உடம்பை குறைச்சுப்போட்டன்,

அதுக்கு மனுசி பின்னங்காணிக்குள்ளை கிடந்த
தேசிக்காயை பொறுக்கி நெல்லியடி சந்தைக்குள்ளை
விற்கச்சொன்னாள்
கத்தி கத்தி வித்ததிலை குரல் நாணும் அறுந்து போச்சு
உடம்பும் குறைஞ்சு போச்சு
எண்டு அவர் சொல்லி முடியவில்லை.........


அண்ணையிட்டை அடுத்த கேள்வி
கோயில் வளவு எல்லாம் என்ன மாதிரி?!!!!!!!!!!!!!\
கோயிலின்ரை கேணியும் கட்டி முடியுது
கங்கா மாமாக்கு போண் நம்பர் குடுத்தனான்
கதைச்சவரோ தம்பி எண்டார்
நான் கதையை மாத்திப்போட்டன்’

அண்ணை கோயில் மடத்தின்ரை கூரை ஓடு உடைஞ்சதாமெல்லோ
என்ன அண்ணை?
பக்கத்து காணி பனையிலை இப்ப பனங்காயும் வருகுதோ?
எண்ட ஆச்சரிய கேள்வி எண்ட எனக்கு.


கனடாவிலையிருந்து மடம் கட்ட வந்தவருக்கு
பத்திக்கொண்டு கோவம் வந்திட்டுது,
ஆனால் என்ன செய்ய
சத்தம் போட்டு பேச காணிக்காரருக்கு கேட்குமே
அவை லண்டனிலை எல்லே..........
எப்படிக்கேட்கும்?

அதை சொல்லி போட்டு என்னை பார்த்துக்கேட்டார்
எப்ப தம்பி உனக்கு கல்யாணம் எண்டு
பொண்ணு ரெடியாக எனக்கு கல்யாணம் எண்டு
மெல்லவா நான் சொல்ல
எங்கடை பிறந்த நாள் குட்டியின்ரை அப்பாவுக்கு
கொடுப்புக்கை சிரிப்பு
நானும் சிரிக்க எல்லாருக்கும் சிரிப்பு.

ஆனால் தம்பி ஊரிலை எல்லாரும் பரவாயில்லை’
நல்லாத்தான் இருக்கினம்
நீங்களும் எப்படித்தம்பியவை
நல்லாத்தானே இருக்கிறீங்க எண்டு கேட்க அண்ணை
அதுக்கு விடை தெரியாத முகம் எனக்கு?

உங்களுடன் ஆரவாரம் - சில நிமிடங்கள்

வணக்கம்

மீண்டும் நீண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி,பல்வேறு காரணங்களாலும் சிறிது காலம் உங்களை சந்திக்க முடியாமையிட்டு மிக கவலையடைகின்றேன்
,கொழும்பில் பதிவர்கள் சந்திப்பில் எடுத்துக்கொண்ட கருத்துக்கு அமைவாக பல பதிவர்கள் பதிவுலகத்தைவிட்டு மறந்து விட்டார்களோ அல்லது விலகிவிட்டார்களோ என்ற கேள்வி என்னை வெகு சீக்கிரத்தில் இதை எழுதத்தூண்டியது, நிச்சயமாக பதிவுலகத்தைவிட்டு நான் ஒருபோதும் விலகி இருக்கவில்லை.பதிவுகள் இடுவதற்க்கு மாறாக நான் பதிவுலகத்தில் வரும் அனைத்துப்பதிவுகளின் வாசகனாக இருந்து வந்தேன்,வருகிறேன்.

நேரங்கள் காலங்கள் எனக்கு அமைவாக வரும்போது தொடர்ந்து தொடர் பதிவுகளை நான் இடுவதற்கு தயாராகவுள்ளேன்,அதுவரை ஓரிரண்டு பதிவுகளையாவது உங்களோடு பகிர்ந்து அவ்வப்போது உங்களுடன் நான் இருக்கவுள்ளேன் என்று என் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்,
அதைவிட என்னால் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து அதனூடாக உங்களுடன் கூடியிருக்கவில்லையே என்று மிகக்கவலைப்பட்டவன் நான்.
எம் நீண்டகால எதிர்பார்ப்பு கூடியளவு பதிவர்கள் ஒன்றுகூடி உலகளவில் பேசும்படியாக அமையவேண்டுமென்றிருந்தது,அதற்கமைவாக கொழும்பில் பதிவர் சந்திப்பு முதற்தடவை இடம்பெற்றிருக்கிறது,அதை நேரடியாக பார்க்ககிடைத்ததும் எமது எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியும் ஒட்டுமொத்தமாக மனதில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது,மிக மகிழ்ச்சி,அதேபோல் அப்படியான பதிவர் சந்திப்பை ஒழுங்கு செய்த அனைத்து பதிவர்களுக்கும் இலங்கையின் ஒரு வலைப்பதிவாளன் என்ற வகையில் என் வாழ்த்து்க்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் ஒரு சந்திப்பு இடம்பெறுவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் கூட இடம் பெறுவதாக கேள்வியுற்றேன்,வாழ்த்துகள்,

ஆகவே வலைப்பதிவாளர்களுடன் நானும் கைகோ்ர்த்து உங்கள் ஆதரவுடன் ஆரவாரம் தொடர்ந்தும் ஆரவாரிக்கும்

வலைப்பூக்களில் த.அகிலனின். ‘’கனவுகளின் தொலைவு’’(மலர்-18)

தினக்குரல் வாரமலர் ''வலைப்பூக்களில்'' இந்த வாரம் 18வது மலராக த.அகிலன் அவர்களின் ‘’கனவுகளின் தொலைவு’’ என்ற வலைப்பதிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒரே பார்வையில் '''8 வலைப்பூக்கள்"

ஒரே பார்வையில் "8 வலைப்பூக்களை" தர முயற்சி செய்துள்ளேன்.சில பூக்களை பிரதி செய்த நண்பன் மாயாவிற்க்கு எனது நன்றிகள்.

(1) ( 2)

(3)

(4)




(5)


(6)




(7)




(8)

வலைப்பூக்களின் 17வது மலர் (04-05-2008)

தினக்குரல் வாரமலர். வலைப்பதிவாளர்களையும் அவர்களின்
பதிவுகளையும் ''வலைப்பூக்கள்'' பகுதி ஊடாக அறிமுகம் செய்து
வருகின்றது.
அந்த வகையில் 17வது மலர்ராக றஸ்மினின் ‘’எனது பார்வை’’
என்ற வலைப்பதிவு இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனது நன்றிகள்.
திரு.பாரதி அவர்கள்.
பிரதமஆசிரியர்
தினக்குரல் வாரமலர்

உதவி ஆசிரியர்கள்
ஆசிரியர் பீடம்
தினக்குரல் வாரமலர்

கணனி உத்தியோகத்தர்கள்
கணனி பிரிவு
தினக்குரல் வார மலர்